உம்ரா செல்லும் பெண்களுக்கான ஆடைகளில் புதிய கட்டுப்பாடு!

Uncategorizedஉம்ரா செல்லும் பெண்களுக்கான ஆடைகளில் புதிய கட்டுப்பாடு!

சவுதி அரேபியாவின் மெக்காவில் (Mecca) அமைந்துள்ள புனித மசூதியில் (Grand Mosque) உம்ராவை மேற்கொள்ளும் இஸ்லாமிய பெண்களுக்கு சவுதி அதிகாரிகள் ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மசூதிக்கு வரும் இஸ்லாமியப் பெண்கள் சில விதிகளுக்குட்பட்டவாறு உடைகளை அணிந்தால் மட்டுமே வழிபாடுகளின் போது அனுமதி உண்டு என்று X தளத்தில் பதிவிட்டுள்ளது.

பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகள்:
  • உடையானது தளர்வானதாக இருக்க வேண்டும்
    ஆபரணங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
    பெண்ணின் உடலை முழுமையாக உடை மறைக்க வேண்டும்தற்போது, நாட்டில் உம்ரா சீசன் களைகட்டியிருப்பதால், இந்த விதிகள்  முதன்மைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நடப்பு சீசனில் சுமார் 10 மில்லியன் முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து மெக்கா நோக்கி உம்ரா யாத்திரை மேற்கொள்வார்கள் என்று சவுதி அரேபியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
Categories:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 20 seconds